வெள்ளி, 10 ஏப்ரல், 2015

எமது கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியின் 2015‡2016 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான பேரணி 06.04.2015 திங்கள் மாலை 4.15 மணிக்கு எமது பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா கல்லூரி வரையிலும் சென்று வெற்றிகரமாகத் திரும்பியது. கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாகவும், இங்கிலீஷ் மீடியம் வகுப்புகள் நடைபெறுவது குறித்தும், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டி கோஷ­ங்கள் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது.
பேரணியைக் காரைக்கால் கல்வித்துறையின் துணை இயக்குநர் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்களும், முதன்மைக் கல்வி அதிகாரி திரு.வி.வெற்றிவேல் அவர்களும், பள்ளித் துணை ஆய்வாளர்கள் திரு.எம்.மோகன்தாஸ் அவர்களும், திரு.எஸ்.தங்கையன் அவர்களும், உடற்கல்வி இயக்குநர் திரு.மனோகரன் அவர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.கோ.காமராஜ் என்கிற சீனிவாசன் அவர்களும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். தலைமையாசிரியர்(பொறுப்பு) திரு. தம்பி ஹாரிஸ் அவர்கள் வரவேற்புரையாற்றி, விருந்தினர்களைக் கெளரவித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கத்தின் அலுவலக நிர்வாகி திரு.மு.நந்தகுமார் , துணைத் தலைவர் திரு.இரா.சுபாஷ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பேரணியில் பங்கேற்றார்கள். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று பேரணி சிறக்க பேருதவி புரிந்தார்கள். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திரு.மிஷேல், திரு.ஸ்ரீகாந்த், திருமதி.ஸ்ரீப்ரியா, திருமதி.செல்வபாரதி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் திரு.நாராயணன் என்எஸ்எஸ் மற்றும் சிஎஸ்எஸ் மாணவர்களைக் கொண்டு பேரணியை நேர்த்தியாக நடைபெற வைத்தார். காரைக்கால் நகர காவல் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து கொடுத்தார்கள்.